ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கும் எனத் தெரிய வருகிறது.
குறிப்பிட்ட சந்திப்பின் போது கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை என்பன பற்றி ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டது. பொது பலசேனாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டன.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு உட்பட பிரச்சினைகள் பற்றி விளக்கப்பட்டன. அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை என்பன தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. அரசு வழங்கிய உறுதிமொழிகள் வழங்கப்படாமையினால் சமூகம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் எடுத்து விளக்கப்பட்டது.
6 முஸ்லிம் காங்கிரஸின் முறைப்பாடுகளை செவிமடுத்த ஜனாதிபதி இவை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டினை தெரிவிக்காமையினால் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் முறைப்பாடுகளை செவிமெடுத்த ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து பேசி தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்புக்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஏற்பாடு செய்யவுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களையடுத்து ஜனாதிபதியின் மீது நம்பிக்கையிழந்துள்ளார்கள். கட்சியின் ஒரு அமைச்சரைத் தவிர ஏனையோர் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்க வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அரசியல் உயர்பீடம் கூடி வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலியை கேசரி தொடர்பு கொண்டு கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோது அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் உறவு தொடர்ந்து அருகி வருகிறது.
அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு. இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு. இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
<வீரகேசரி>

0 comments :
Post a Comment