ஜனாதிபதி முறையை முற்றாக நீக்;க வேண்டும் என்று கூறிய பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனாதிபதியின் சில அதிகாரங்களை மட்டும் நீக்கவேண்டும் என கூறியிருப்பது உலமாகட்சியின் வழிகாட்டலுக்கு கிடைத்த வெற்றியாகும் என உலமாகட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பது கூர்மையான கத்தி போன்றதாகும். இதன் மூலம் நல்ல பல விடயங்களை ஆக்கவும் முடியும், அழிவை ஏற்படுத்தவும் முடியும். இந்தக்கத்தியாரிடம் உள்ளதோ அவரைப்பொறுத்தே இதன் பெறுமானம் கணிக்கப்படும்.
கடந்தகால ஜனாதிபதிகளினால் சிறுபான்மை இனங்கள் பாரிய பல நன்மைகளை பெறாத போதும் சிலவற்றை பெற்றுள்ளது. ஐந்துவீத வெட்டுப்புள்ளியை பிரேமதாசாவினால் நிறைவேற்ற இந்த நிறைவேற்று அதிகாரமே காரணமாக இருந்தது. இல்லாவிடில் அதனை பாராளுமன்றத்துக்கு விடப்பட்டு அங்கு மூன்றில் இரண்டு பெற்றே நிறைவேற்ற வேண்டி வந்திருக்கும். இது அன்றைய நிலையில் சாத்தியமானதல்ல. அதேபோல் தென் கிழக்குபல்கலைக்கழகம் உருவாகவும் நிறைவேற்று அதிகாரமே காரணமாக இருந்தது.
இவற்றையெல்லாம் வைத்தே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நீக்குவதை உலமாகட்சி ஆதரிக்கவில்லை என்றும் சில அதிகாரங்களை நீக்கினால் போதும் எனவும் எமது உலமா கட்சித்தலைவர் கலாநிதி மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தமிழ் சிங்கள ஊடகங்களில் வந்ததன் பின்னரே பொது வேட்பாளரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியதாகவும், உலமாகட்சியின் அரசியல் வழி காட்டலக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கின்றோம் என முஸம்மில் மௌலவி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment