வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக 'கபே' தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதி
லிருந்து இன்றுவரை 27 சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்இது தொடர்பாக கபே அமைப்பின் தலை
வர் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில், நேற்று புதன்கிழமை அதிகாலை திவுலப்பிட்டியவில் எதிர்த்தரப்பு கட்அவுட் ஒன்றை வைப்பதற்கு முயற்சிக்கையில் அப்பிரதேசத்தின் சில ஆளும் கட்சி உறுப்பினர்களால் எதிர்த்தரப்பினர் தாக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இதுவரையில் நாடுமுழுவதும் இருந்து 27 சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இவற்றில் 9 சம்பவங்கள் மட்டும் கடுமையான வன்முறைச் சம்பவங்களாகும்.புத்தளம், களுத்துறை, கண்டி பிரதேசங்களிலேயே அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.ஜனாதிபதித்தேர்தல் நெருங்குகையில் வன்
முறைகள் மேலும் அதிகரிக்கலாம். இது தொடர்பாக நாம் அவதானமாக இருக்கின்றோம். எமது அமைப்பு வடக்கு கிழக்கு உட்பட நாடுபூராகவும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.
மக்களது வாக்குரிமையை பாதுகாத்து நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment