அஷ்ரப் ஏ சமத்-
அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா நிறைவேற்று குழு உறுப்பினரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹம்பாந்தோட்டை தலைவருமான அஷ்ஷெய்க் அமித் அக்ரம் நூர் அவர்கள் மற்றும் இன்னும் சில அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் காட்சிதரும் புகைப்படங்கள் கட்டவுட்டுக்களாக ஹம்பாந்தோட்டை நகரில் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஜம்மியத்துல் உலமாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் எனஉத்தியோகபூர்வமாக அறிவித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நடுநிலை போக்கை கடைபிடித்துள்ள நிலையில் குறித்த அரசியல் கட்டவுட் தொடர்பாக தமக்கு எதுவித அறிவிப்பம அனுமதியும் பெறவில்லை எனவும் ஜம்மியத்துல் உலமா தேர்தல் தொடர்பாக கொண்டுள்ள அதே நிலைபாட்டை தானும் கொண்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா நிறைவேற்று குழு உறுப்பினரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஹம்பாந்தோட்டை தலைவருமான அஷ்ஷெய்க் அமித் அக்ரம் நூர் அவர்கள் செய்தி இணையம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment