வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும்!

 (ஆதி) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களினால் தரம் 05 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் இன்று(30/11) காலை 9.30 மணியளவில் திருநாவற்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா, கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம், வவுனியா நகரசபை முன்னாள் உபநகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவநேசன்(பவன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராஜசேகரம் (சேகர்) நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய அதிபர் திருமதி.செல்வராசா கௌரிதேவி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி.திருவருள்நேசன், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் திரு.கிருபாகரன், திருநாவற்குள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ரத்னமால மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புலம்பெயர்ந்த தமிழர்களில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ் வாதார மேம்பாட்டிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால், சிறுவர்களின் கல்வி வீதம் வளர்ச்சி காணவேண்டும். எமது தோழர் நாகராஜா வன்னி மண்ணுக்கு ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியது, அவரைப் போன்று ஏனைய புலம்பெயர் உறவுகளும் தங்களால் இயன்ற உதவிகளை சமூகத்துக்கு செய்ய முன்வர வேண்டும் அத்துடன் சமூகத்தில் இன்னும் பல நாகராஜாக்கள் உருவாகி சமூகப்பணியாற்ற வேண்டும் எனவும், 

30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், புலம் பெயர் உறவுகளின் உதவிகள் நிச்சயமாக தேவை. புலம் பெயர் உறவுகளின் உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மறுமலர்ச்சி, சிறுவர்களின் கல்வி வளர்ச்சியை பெற முடியும். நிகழ்காலத்தில் ஒரு அரசியல் தீர்விற்காக மீண்டும் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. யுத்தத்தால் பாதிக்கபட்ட போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு புலம் பெயர் உறவுகளின் உதவிகள் இன்றியமையாததாகும் எனவும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :