பவுண்­க­ளாலோ அல்­லது டொலர்­க­ளாலோ விலை­கொ­டுத்து வாங்கக்கூடியவர்கள் அமைச்­ச­ர­வையில் இல்லை!

முதுகெலும்பற்ற சிலரை தலைவர்களாக்கும் தேவை சில வெளிநாட்டு சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது. பவுண்­க­ளாலோ அல்­லது டொலர்­க­ளாலோ விலை­கொ­டுத்து வாங்­கக்­கூ­டி­ய­வர்கள் இனி யும் என்­னு­டைய அமைச்­ச­ர­வையில் இல்லை என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபே­வர்­தன, அர­சி­ய­லுக்கு பிர­வே­சித்து 25 வருட பூர்த்­தியை முன்­னிட்டு ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிகழ்வு நேற்று மாத்­த­றையில் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர் கூறி­ய­தா­வது,'முது­கெ­லும்பு அற்ற சிலரை தலை­வர்­க­ளாக்கும் தேவை, சில வெளி­நாட்டுச் சக்­தி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அவர்கள் அடிக்கும் தாளத்­துக்­கேற்ப ஆடு­ப­வர்­களை நிய­மிக்க வேண்டும் என்­பதே அந்த சக்­தி­களின் நோக்­க­மாகும்.

இருப்­பினும், எமது மக்கள் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தில்லை. யார் வந்­தாலும், என்னை தோற்­க­டிக்க முடி­யாது. ஒரு­சிலர் என்னை, போர்க்­குற்ற நீதி­மன்­றத்­துக்கு அனுப்ப முயற்­சிக்­கின்­றனர்.பேய்க்கு பயந்­த­வர்கள், மயா­னத்தில் வீடு அமைக்கக் கூடாது என அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்'.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :