பழுலுல்லாஹ் பர்ஹான்-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2014 தேசிய மீலாத் விழா போட்டியில் ஆரம்பப் பிரிவு கலாசார நிகழ்ச்சி குழு ஹஸீதா போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவிகள் பெற்றுள்ளனர்.
இதற்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இதன் போது இவர்களுக்கான பரிசை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸமீல் நளீமி வழங்கி வைத்தார்.
இங்கு இடம்பெற்ற 2014 தேசிய மீலாத் விழா போட்டி பரிசளிப்பு விழாவில் தேசிய மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ,மாணவிகள் பரிசும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment