தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களையும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் என்னவென்பதை யும்அரசு தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனசவால் விடுக்கும் பொதுபலசேனா ஜனாதி பதியை
தீர்மானிப்பது சிறுபான்மையினர் அல்ல சிங்கள பௌத்த சக்திகளே என்று அவ்வமைப்பு தெரிவித்தது.
கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்;
ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சதிகாரர்களுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சில நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டுள்ளனர்.
எனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் என்ன நிபந்தனைகள் என்ன? செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் என்னவென்பது தொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இந்நாட்டின் தலைவர்கள் யாரென்பதை சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் காலம் மலையேறி விட்டது. இனி ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம். இந்நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக பொதுபலசேனா உருவாகி விட்டது. சிங்கள பெளத்தர்களே இந்நாட்டை ஆழ வேண்டும்.
அதனை நாமே தீர்மானிப்போம். எனவே அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டை காட்டிக்கொடுக்கும் சிங்கள பௌத்தர்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறை செய்வதற்கு முன்வரக்கூடாது.
இங்கு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசிய தலைமைத்துவமே எமது இலக்காகும்.
சிங்கள பௌத்தர்களை யார் பாதுகாக்கின்றார்களோ அவர்களுக்கே எமது ஆதரவு. அவ்வாறு இல்லாவிட்டால் எமது கையில் தேசிய வேட்பாளர் இருக்கிறார். தக்க தருணத்தில் களமிறக்குவோம்.
அதற்காக விசேடமாக அரசியல் குழுவொன்றை நியமித்துள்ளோம். எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு இன்று தலைமைத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பொது வேட்பாளரை தேடி ஓடுகிறது.
இவ்வாறு எதிர்க்கட்சியின் நிலை தொடர்ந்தால் விலாசம் இல்லாமல் போய்விடும்.
தேசிய பிரச்சினை
சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் பாதுகாப்பு பறிபோவதை எதிர்த்து கடந்த காலங்களில் நாம் போராடினோம். ஹலால் பிரச்சினை வில்பத்துவில் காடுகள் அழிப்பு காணிகள் பறிமுதல் ஷரிஆ வங்கிகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக குரல்கொடுத்தோம்.
ஆனால், இவை தொடர்பில் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ எவரும் குரல் கொடுக்கவில்லை மௌனம் சாதித்தனர்.
இன்று ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும். குடும்ப அரசியலையே ஒழிக்க வேண்டும் என தேசிய பிரச்சினைகளை உதறித்தள்ளி விட்டு அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வழமையான அரசியல் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
யுத்த காலத்தில் பிரபாகரனைப் பார்த்துக்கொண்டு தேசிய பிரச்சினைகளை மறந்தோம். ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. எனவே, தேசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்போம்.
சிங்கள பௌத்த ராஜ்யத்தை இங்கு உருவாக்குவோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். விதாரன்தெனியே நந்ததேரர் தேசிய அமைப்பாளர் எதிர்க்கட்சிகள் இன்று தமது பொது வேட்பாளரத் யாரென்பதை தீர்மானிக்க முடியாது திண்டாடுகின்றனர். எனவே இவர்கள் எப்படி நாட்டை ஆளப்போகின்றார்கள் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்க போகின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment