அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதிக்காக விஷேடபூசைவழிபாடும், மரநடுகை நிகழ்வும்!

த.நவோஜ்-

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இந்து சமய கலசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பெயரில் எமது நாட்டின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டி செவ்வாய்;கிழமை விஷேடபூசைவழிபாடும், மரநடுகை நிகழ்;வும் இடம்பெற்றது.

கும்புறுப்பிட்டி கண்ணகி அம்மன் ஆலய தலைவர் கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக குச்சவெளி பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், கலாசார உத்தியோகத்தர் ஆர்.எம்.எஸ்.பியசேகர, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.திருவானந்தராஜா, கும்புறுப்பிட்டி வடக்கு, தெற்கு கிராம உத்தியோகத்தர் திருமதி.தே.பிரியதர்சினி, வாழ்வின் எழுற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜி.சிவாஜினி, கும்புறுப்பிட்டி வடக்கு, தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செல்வி.பி.ஜெயந்தினி, திருமதி.ஆர்.நாமகள், கும்புறுப்பிட்டி மெ.மி.த.க.பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஏனைய ஆலயங்கள், சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விஷேடமாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.நமசிவாய குருக்களினால் ஆசியுரையும், மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.நமசிவாய குருக்களினால் பூசைகள் யாவும் இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :