மலேஷியாவின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (உம்னோ), இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று புதன்கிழமை (26) அன்று கோலாலம்பூரில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந் நிகழ்வு உம்னோ தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இளம் அரசியல்வாதிகளுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதற்கும், பரஸ்பரம் முன்னேற்றகரமான பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக வழிவகுக்கப்பட்டுள்ளது.
பிரஸ்தாப உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் உம்னோ செயலாளர் நாயகமும், சமஷ்டி எல்லைகள் அமைச்சருமான தெங்கு அத்னான் மன்சூர் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர்கள் இருவரும் தற்கால அரசியல் நிலைவரம், இருதரப்பு உறவுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் மலேஷியத் தலைநகரில் நடைபெற்ற ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (உம்னோ) வருடாந்த மாநாட்டில் உள்நாட்டு முக்கியஸ்தர்களுடன் 70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹக்கீம் சிறப்புரையாற்றியுள்ளார்.
நீதி, சட்ட துறைகளோடு தொடர்புடைய சில உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் அமைச்சர் ஹக்கீம் ஈடுபட்டார்.
அமைச்சர் ஹக்கீமின் மலேஷிய விஜயத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல், அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை (28) அமைச்சர் ஹக்கீம் நாடு திரும்பவுள்ளார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.மு.கா தலைவர், அமைச்சர் ஹக்கீம் அவர்களின்
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment