அஷ்ரப் சமத்-
முன்னணி அரிசி வர்த்தகரான மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரை அரசியல் பலி தீர்க்க அரசாங்கம் அரிசி விலையை இறக்குமதி விலையிலும் பார்க்க குறைத்து விற்பனை செய்து மக்களின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐக்கியதேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினர் எம் எஸ் எம் பைறுஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்..
லக் சதொச விற்பனை நிலையங்கள் அரிசி விலையை அதிரடி விலைகுறைப்பு செய்து இன்று முதல் விற்பனை செய்கிறது.
அத்திய அவசிய பொருளான அரிசிக்கு ஒரு ருபாய் மட்டுமே வரி அறவிடப்படுகிறது.
இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் லக்சதொசவில் அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்திய பொன்னி சம்பா இறக்குமதி விலையிலும் 12 ருபாய் விலை குறைக்கப்பட்டு 60 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியவில் இருந்து இறக்குமதியாகும் நாட்டு அரிசி இறக்குமதி விலையிலும் 9 ருபாய் விலை குறைக்கப்பட்டு 55 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைட் பச்சை அரிசி இறக்குமதி விலையில் இருந்து ஏழு ரூபாய் குறைக்கப்பட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது லக் சதொச வசம் கையிருப்பில் ஒரு லட்சம் டன் அரிசி உள்ளது இந்த விலை குறைப்பினால் அரசாங்கம் கோடிக்கணக்கான ருபாய் நஷ்டம் அடையும் மீண்டும் இந்த சுமை வேறு ரூபத்தில் மக்களே வரியாக செலுத்த வேண்டிவரும் அரசியல் பழி தீர்க்கவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐக்கியதேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினர் எம் எஸ் எம் பைறுஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments :
Post a Comment