கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும்?

அஷ்ரப் ஏ சமத்-

கிழக்கு மாகாணசபை ஆளும்தரப்பின் முவர் தனித்து செயற்பட முடிபையடுத்து அந்த மாகாணசபையில்  ஆட்சி மாற்றத்திற்கான சுழ்நிலை ஒன்று உறுவாகியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 பேரும் எதிர்கட்சி உறுப்பிணர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண அரசை அமைப்பதற்கான அறிகுறி தெண்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பிணர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்த்தவர்கள் பலர் தங்களுடன் பேசி இருப்பதாகவும் அது தொடர்பில் விரைவில் சாதகமான முடிபொன்றை தாங்கள் மேற்கொணடு அறிவிப்பதாகவும் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அ.இ.முக்கியத்தவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அ.இ.மக்கள் காங்கிரசின் முக்கிய உறுப்பிணர் மேலும் தகவல் தருகையில் 

தற்போதைய சுழ்நிலையில் ஜ.தே.கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பிணர்களும், த.தே. அணியின் 11 உறுப்பிணர்களும் அ.இ.ம.காங்கிரசின் 3 சிகல உறுமைய கட்சியின் 1 உறுப்பிணரும் இணைந்து 19 உறுப்பிணர்கள் கொண்ட ஒர் ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புக்கள் நிறையவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான மகாணசபை ஒன்று அமைக்கப்படின் அ.இ.மக்கள் காங்கிரஸூக்கு அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது நாட்டின் தேசிய நல்லிணக்கம் பற்றியும் சகல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றியும் பேசப்படும் இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கு மாகணத்தில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை உள்ளடக்கிய கெல உறுமைய, ஜ.தே.கட்சி, தழிழ் தேசிய முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து செயற்படுவது மக்களின் இன ஜக்கியத்துவத்தையும் இன சௌயண்னியத்தையும் ஏற்படுத்தும். 

உண்மையான தேசிய நல்லிணக்கம் கிழக்கில் இருந்துதான் ஊற்று எடுக்கப்போகின்றதெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :