நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரமுகர்களுடனான ஒன்றுகூடல் நேற்று இரவு காத்தான்குடி Gadafi Beach Gardenல் இடம்பெற்றது.
சூறாசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்கள் கலந்துகொண்டு விஷேட உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களினால் ஆலோசனைகளும் கருத்துக்களும் வெளியிடப்பட்டதுடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.
இறுதியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் வெளியிடப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment