வாகரையில் சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

 த.நவோஜ்-

மூக அபிவிருத்தி நிறுவனத்தின் (பாம் பவுண்டேசன்) சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை வாகரை கண்டலடி அருந்தி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருச்செல்வம் ஜோய் கிறிஸ்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரைப் பிரதேசத்தில் பனிச்சங்கேணி வாவியை தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற மக்களின் சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் 60 பேர் கலந்து கொண்டனர்.

கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுதல், வாவியில் சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்தல், தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதை முற்றாகத் தடை செய்தல், அதனோடிணைந்த வகையில் வாவியை முகாமை செய்யக்கூடிய வகையிலான முகாமைத்துவக் குழுவை அமைப்பதற்கான முன்னோடிக் கருத்தரங்குகளை வாகரைப் பிரதேசத்தில் நடாத்தி வழிப்புணர்வை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும்.

இக் கருத்தரங்கில் வாகரைப் பிரதேச சபையின் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், முகாத்துவ உதவியாளர் எஸ்.ஜெயாபரன், கடற்றொழில் பரிசோதகர் ஏ.அரவிந்தன், கரையோரம் பேணல் திணைக்களத்தைச் சேர்ந்த பி.முகுந்தன், வாகரை பொலிஸ் நிலையத்தின் சார்பில் இந்திக, பிரதேசத்திற்கான கிராம சேவை உத்தியோகத்தர் டி.சுதாகரன், வேள்ட் விசன் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.செரோன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :