அமைச்சர்கள், மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பெயரில் கௌரவ சுகாதார அமைச்சரினால் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் புதிய மூன்று ஆண்டுகளுக்கான அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பல்கலைக்கலக மாணவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், வர்த்தகர்கள், முன்னால் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பிரத்தியோக செயலாளர்கள் என சுமார் 85க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான முதலாவது கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் இன்று சனிக்கிழமை(15) மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் கேட்ப்போர் கூடத்தில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜனாப் இப்றாலெவ்வை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தற்போது எதிர் நோக்கியுள்ள இடப்பற்றாக்குறை மற்றும் அடிப்படைத்தேவைகள் எதிர்காலத்தில் பூர்த்தியாக்கப்படவுள்ள கட்டிடங்கள் புதிதாக எதிர்காலத்தில் அமைக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் பற்றிய விபரங்களை புதிய அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சிறப்பாக இயக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார் .
அதனைத் தொடர்ந்து புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது புதிய அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திரு ராஜன் மயில்வாகனம் அவர்களும் உப தலைவராக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் றம்ழான் அவர்களும் செயலாளராக வைத்தியசாலையின் செயலாளர் திரு வுகுகராஐh அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் பதினைந்து பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது இக்கூட்டத்திற்கு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்களான வைத்தியர் திருமதி டுஆ நவரட்ணராஜா, வைத்தியர் திருமதி மு கனேசலிங்கம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்

.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment