கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஹரீஸ் MPயின் சேவைக்கு மக்கள் பாராட்டு





எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்லும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழு தலைவரும் , கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சேவையினை கல்முனைக்குடி , சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

சுனாமி அனர்த்தின் பின்னர் இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி பல பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.சுனாமியின் பின்னர் கடல்நீர் ஒரு துளியும் படாத எத்தனையோ பாடசாலைகள் புதிய கட்டடிடங்களால் அலங்கரிக்கப்பட்ட அதே வேளை சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இக்கல்லூரி மட்டும் பொலிவிழந்து காணப்பட்டதனை யாவரும் அறிவர்.

இக்கல்லூரிக்கு திருமதி மர்ஜுனா ஏ காதர் அதிபராக இருந்த போது அமைச்சர் திருமதி பேரியல் அஸ்றப் மூலமாக நெகோட் திட்டத்தின் மூலம் மூன்று மாடிக் கட்டடிடம் ஒன்றையும் மத்திய அரசு மூலம் இன்னுமொரு மூன்று மாடிக் கட்டிடத்தையும் இக்கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்தார். அக்கட்டிடமும் அரைகுறையாகவே உள்ளது.

அதன் பின்னர் அதிபராக இருந்த ஏ. ஆதம்பாவா அவர்களின் காலத்தில் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் மஹிந்தோதய தொழில்நுட்ப கூடம் நிர்மாணிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரின் அயராத முயற்சியினால் 2014 ஜனவரி முதல் கல்முனை வலய கல்வி அலுவலகத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பீ.எம்.எம். பதுறுதீனை அதிபராக நியமித்த பின்னர் கல்லூரி சகல துறைகளிலும் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறானதொரு நிலைமையினை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக இக்கல்லூரியின் பால் தனது கவனத்தைத் திருப்பியுள்ளதுடன் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

இவ்வருடம் ஆரம்பத்தில் கல்லூரி வளாகத்தினுள் அமையவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார் . இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஏ.எம்.ஜெமீல் மற்றும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் பங்கேற்றனர். இக்கட்டடிடம் கல்முனைத் தொகுதியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபம் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது புதுப்பொலிவுபெற்றுள்ளது.

கல்லூரியின் ஸ்தாபகர் தினத்தன்று பல இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டடிடத் தொகுதிக்கான அடிக்கல்லையும் பாராளுமன்ற உறுப்பினர் நாட்டி வைத்தார். அக்கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக்கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களுக்கு பக்க பலமாக பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் , பழைய மாணவர்சங்க தாய்ச்சங்கமும் , பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையும் மிகவும் திறமையாக செயற்பட்டு வருகின்றன.

இதே வேளையில் இக்கல்லூரியின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றான நிருவாக்க கட்டடிடத் தொகுதி 2015 ஆம் ஆண்டில் சுமார் 5 கோடி ரூபா செலவில் அமையவுள்ள செய்தி கல்முனைப் பிரதேச மக்கள் அனைவரையும் மிகவும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இக்கல்லூரியின் அபிவிருத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் , சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் தடாகம் என்பனவற்றையும் தனது அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளார்“.

கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பிரதேசத்திலுள்ள பிரதேசம் இக்கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலேயே கடற்கரை கரப்பந்தாட்ட திடல் , உள்ளக விளையாட்டரங்கு , சிறுவர் புங்கா மற்றும் நீச்சல் தடாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் , பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் மேற்கொண்டு வருகின்றன. 

2015 ஆண்டில் கல்லூரியின் 65 வது ஆண்டு பெருவிழாவொன்றினை மிகவும் விமரிசையாக நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி பாடசாலையின் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதுடன் அவற்றினை பாதுகாப்பதற்கான நூதனசாலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தச் சங்கச் செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் மற்றும் பழைய மாணவர்சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.ஏ.அஸ்லம் சஸா ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :