மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரவில் உள்ள மணற்குளம் கிராமத்தில் உள்ள 48 விடுகளில் சில வீடுகள் நீரில் முழ்கி உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டு இது வரைக்கும் எங்கள் கிராமத்தின் உள்ளக வீதிகளும் பிரதான வீதிகளும் எங்களின் பாவனை ஏற்றவாறு செய்து தரவில்லை எனவும் மழை காலங்கள் வந்தால் கிராமம் நீரில் முழ்வது தொடர்ச்சியாக உள்ளதாகவும் இது வரைக்கும் எந்த ஒரு அரசியல்வாதிகளும் வந்து எங்களை பார்க்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய அதிகாரிகள் வந்து உரிய நிவாரணத்தையும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment