அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர், ஒலுவில்,
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களில் அண்மைக் காலங்களாக அதிக பீன்கள் கரைவலைகளில் பிடிபட்டு வருகின்றன.
இன்று (06) நிந்தவூர் பிரதேசத்தில் மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில் பிடிபட்டதாகவும், ஒரு கிலோ கீரி மீன் நூறு ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் ரூபாய் 65 இலட்சம் பெறுமதியான மீன்கள் இன்று பிடிபட்டதாகவும், இதன் மூலம் மீனவர்களினதும், மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment