டீக்கடை ஊழியர் மகளின் மேற்படிப்பு செலவை ஏற்ற விஜய்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்ப்பவர் எம்.ஷாகுல்ஹமீது. இவரது மனைவி பாஹிராபேஹம். இவர்களது மகள் பாத்திமா சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ்2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். 

பாத்திமாவிற்கு இன்ஜினீயரிங் துறையில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அவருடைய தந்தையின் வறுமை சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை.

இந்த விஷயத்தை தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த விஜய், பாத்திமாவின் இன்ஜினீயரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டார். சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை விஜய் செலுத்தியுள்ளார்.

இதுபற்றி மாணவி பாத்திமா கூறியதாவது:-

‘இன்ஜினீயரிங் துறையில் ஐ.டி. படிக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். ஆனால் எங்கள் வறுமை சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் போய்விடுமோ என தவித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில், கடவுள் போல் விஜய் அண்ணா வந்து எனக்கு உதவி செய்துள்ளார். இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். 

நான் நல்லபடியாக படித்து வேலைப் பார்த்து என் குடும்பத்தை காப்பாற்றுவேன். நன்றாக படி, எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்த விஜய் அண்ணாவிற்கு நன்றி’ என கண்ணீர் மல்க பாத்திமா கூறினார்.

பாத்திமாவின் தந்தை ஷாகுல் ஹமீது கூறும்போது, ‘எங்கள் மகள் படிப்பிற்கு உதவி செய்துள்ள விஜய் தம்பிக்கு எங்கள் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளோம். என் மகள் இனி படித்து எங்களை காப்பாற்றுவாள். எங்களை நேரடியாக அழைத்து இப்படி உதவி செய்த விஜய்யை எந்த காலத்திலும் மறக்க மாட்டோம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :