பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திணைக்களத்தின் 22 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் திகமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் முன்மொழிவின் பிரகாரம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 174 பேருக்கான வாழ்வாதாரப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை திருக்கோவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் பீ.அரசரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகப்பிரிவுகளின் அபிவிருத்திக்குழுத்தலைவருமான சமூகநேயன் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பயனாளிகளிடம் வாழ்வாதாரப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் ஐ.அலியார்,பிரதேச செயலாளர் வீ.ஜெகராஜன்,உதவிப்பிரதேசசெயலாளர் எஸ்.ஜெகரூபன்,கணக்காளர் எம்.அரசரெட்ணம்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.றியாஸ் உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தையல்மெசின் 30பேருக்கும்,தண்ணீர் இறைக்கும் இயந்திரம் 53பேருக்கும்,துவிச்சக்கரவண்டி 33பேருக்கும்,விவாசய தெளிகருவி 54பேருக்கும்,மாஇடிக்கும் இயந்திரம் 1 நபருக்கும்,கிரைண்டர் இயந்திரம் 3பேருக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதி மற்றும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment