எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்டில் கடந்த 2014.09.28 அன்று இறையடி சேர்ந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ அவர்களின் நினைவுக் கூட்டம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் 2014.11.07 ல் சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நினைவுக் கூட்டத்தில் டாக்டர் எம் ஐ.எம்.ஜெமீல்,ஓய்வுநிலை அதிபர் எம்.எம்.எச். அப்துல் காதர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா எம்.சி.அமீர் அஜ்மீர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் ஆகியோர் உரையாற்றினர்.
மறைந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ அவர்கள் தொன்மை மிகு வரலாறுகளை ஆய்வு செய்து புத்தக வடிவில் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வெளியிட்டுள்ளதாகவும் வரலாறுகளை உள்ளதை உள்ளபடி, எதிர்கால சந்ததிகள் பயன்படும் அளவுக்கு சேகரித்துள்ளதாகவும் அவர் மரணிக்கும் வரை வரலாறுகளை சேகரித்து வந்ததாகவும் வரலாறுகளைத் தேடும் ஒவ்வொருவருக்கும் காசிம் ஜீ யின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் இங்கு கருத்துரை வழங்கியவர்களால் பேசப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் மறைந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ நினைவாக புத்தகம் ஒன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மறைந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ யின் சுவன வாழ்வுக்காக துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment