ஜனாதிபதி பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் பஷிர் ஏற்பாடு செய்த இலவச ஆயுர்வேத கொரிய வைத்திய முகாம்!

பழுலுல்லாஹ் பர்ஹான்-

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத் ஏற்பாடு செய்த இலவச கொரிய ஆயுர்வேத வைத்திய முகாம் நவம்பர் மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் புதுக்குடியிருப்பு சித்த வைத்திய ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேற்படி இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் நாள்பட்ட குறுகிய கால நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் என உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

கொரிய சர்வதேச கூட்டுத்தாபன ஒன்றியம்,கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இவ் வைத்திய முகாமின் பிரதான வைபவம் 19-11-2014 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு சித்த வைத்திய ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறும்.

இதில் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சாரள்ஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :