காத்தான்குடியில் 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழா!

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

'பசுமை நிறைந்த நாடு ஒளிமயமான எதிர்காலம்' தேசிய மர நடுகைத் திட்டத்தின் மூலம் இலங்கையின் வன வளத்தை அதிகரிக்கும் இலக்கை வெற்றிகொள்வோம் எனும் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-11-2014 இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழாவின் மட்;டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் அதிகாரி டி.பி.பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது சுப நேரம் காலை 10.41 மணிக்கு 'தயட்ட செவண' தேசிய மரம் மரநடுகை திட்டத்திற்கான முதலாவது மரத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.ஜி.இஹலவல ,காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.முபாறக்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர ,வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலய உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை 'தயட்ட செவண' தேசிய மரநடுகை விழா மட்டக்களப்பு மாவட்டத்திலும் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்றதோடு இதற்காக சுமார் 12000யிரம் மரங்கள் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :