அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான மரநடுகை வைபவம்!

 நிஸ்மி-

நாட்டில் பசுமைப் புரட்சியொன்றை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (15) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேயட்ட செவன ;தேசிய மரநடுகை வைபத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான மரநடுகை வைபவம் இன்று (15) சனிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன், மா நகர சபை உறுப்பினர் என்.எம்.நஜுமுதீன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன், பிரதேசசபை செயலாளர் ஏ.எல்..சலாஹுதீன், பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.நஜுமுதீன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ரி.அன்வர் மற்றும்பொருளாதார அபிவிருத்திஉத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டனர் பிரதம அதிதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர், சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தேசியக் கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தபின் சுப வேளயில் மாங்கன்று ஒன்றினை நட்டு வைத்தார். தொடாந்து ஏனைய அதிதிகள் கனி தரும் பழ மரங்களை சுப வேளையில் நட்டு வைத்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :