மன்னார் மாவட்டத்ததில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுற்பட்ட புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இரவு நேரங்களில் கிராம அச்சத்தில் வாழ்கின்றார்கள் என்றும் இன்று அதிகாலை சுமார் 3 மணியலவில் சில காட்டு யானைகள் கிராமத்தின் பின் பக்கமாக வந்து பயனாளியின் விட்டு தோட்டத்தினை நாசப்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு நாங்கள் 2003 ஆம் ஆண்டு மீள்குடியேறியும் இதுவரைக்கும் அரசாங்கத்தினால் எங்கள் கிராமத்தின் உள்ள விதிகள் திருத்தி தரப்படவில்லை மின்சார கம்பங்கள் கிராமத்தில் உள்ள பயனாளிகளின் விட்டு வளாகத்தின் ஊடாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது விவசாய காலங்கள் வந்தால் காட்டு யானைகளின் தொல்லைகளும் அதிகரித்து கொண்டுவருகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக கனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment