பி.எம்.எம்.ஏ.காதர்-
இலங்கையின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றவருமான மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.ஆர்.அப்துல் ஹமீட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான 'மாமி இல்லாத பூமி' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த சனிக்கிழமை (2014-11-15) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தரும் கவிஞருமான எம்.பி.ஏ.ஹசன் (மருதமுனை ஹசன்) தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார, வீடமைப்பு, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,மர்ஹூம் ஏ.ஆர்.ஏ. அஸீஸ் நிதியத்தின் தலைவரும,; விரிவுரையாளருமான ஏ.ஏ.நுபைல், மர்ஹூம் மருதூர் கொத்தன் நிதியத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. கலீலுர் றகுமான், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அல்-மருதமுனை சஞ்சிகையின் ஆசிரியர் எம்.சி.எம்.அப்துல் காதிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்;.
என்.எம்.எம்.இஸ்மாயில் அறிமுக உரையையும், கவிஞரும் அதிபருமான ஏ.ஆர் நிஃமத்துல்லா விமர்சன உரையையும,; கிழக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் செ. யோகராசர் ஆய்வுரையையும், ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம் பிர்தௌஸ் நயத்தல் உரையையும் நிகழ்த்தினார்கள் ஆசிரியரும் கவிஞருமான எம்.எம்.விஜிலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
மருதமுனைப் பிரசேத முக்கியஸ்தர்கள் மற்றும் எழுத்தாளர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)

%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment