பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதியில் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டம்





பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ்; 4 இலட்சத்து 12 ஆயிரத்து 250பது ரூபாய் நிதியில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள் உட்பட 10 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட 4 இலட்சத்து 12 ஆயிரத்து 250பது ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 14-11-2014 இன்று வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்; ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்  ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஓட்டமாவடி பிரதேச இணைப்பாளர் எம்.கஸ்ஸாலி உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :