பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ்; 9 இலட்சம் ரூபாய் நிதியில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்,பாடசாலைகள் உட்பட 9 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழிநுட்ப உபகரணங்கள்,விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 14-11-2014 இன்று வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்; ,பாடசாலைகள் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில்; வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் திவி நெகும பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் , பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஓட்டமாவடி பிரதேச இணைப்பாளர் எம்.கஸ்ஸாலி உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment