ஸிறாஜ் ஏ.மனீஹா-
அட்டாளைசசேனை நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஒன்று கூடல், 2015ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு மற்றும் பாராழுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் நிதி ஒதக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு என்பன இன்று(29) அட்டாளைச்சேனை முஹைமின் பள்ளிவாசல் மத்ரசா மண்டபத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.உவைஸ், சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன்,கிராம உத்தியோகத்தர் சாஜகான்,அந்நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.இத்ரீஸ், பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ஹாசிம் உட்பட ஊடகவியலாளர்கள், கழக உறுப்பினர்கள்,பள்ளிவாசல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதினின் சேவையினைப் பாராட்டி நியுஸ்டார் விளையாட்டு கழகத்தினரால் பொன்னாடை போர்த்தி நிணைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment