அஹமட் இர்ஸாட்-
ஓட்டமாவடி பிரதேச சபையின் 44வது சபை அமர்வு இன்று 28.11.2014 வெள்ளிக் கிழமை சபை மண்டபத்தில் சூடான வாதப்பிரதிவாதங்களுடன் தவிசாளருக்கெதிரான குற்றப்பத்திரிகை ஒன்றும் ஆளும் கட்ட்சி உறுப்பினர் SI.முஹாஜிரீன் ஆசிரியரினால் வாசிக்கப்பட்டு சபையில் சமர்பிக்கப்பட்டது. மேலும் இரண்டு வார காலத்துக்குள் சபை உறுப்பினர்களுக்கு இது சம்பந்தமாக தவிசாளர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சபையில் தெரிவித்தார்.
இதன் போது தனது கருத்தினை தெரிவித்த ஆளும் கட்ட்சி உறுப்பினர் ஜுனைட் நளீமி கல்குடா பிரதேசத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரின் பெயரை திட்டமிட்டு அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் தற்போது திடீர் ஞானத்துடன் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக முஹைதீன் அப்துல் காதரின் பெயரை வைக்க முற்படுகின்றனர் என்றும், ஓட்டமாவடியில் முஹைதீன் அப்துல் காதர் கொண்டுவந்த விளையாட்டு மைதானத்துக்கு அவருடைய பெயரை திட்டமிட்டு வைக்கப்படாமல் இருப்பதானது பொதுமக்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தாலும், அந்த பொது மைதானத்துக்கு செல்லும் ஓட்டமாவடி புகையிரத கடவைக்கு அருகாமையில் உள்ள வீதிக்காவது அன்னாருடைய பெயரை வைக்க வேண்டும் என்ற விடயத்தை சபையில் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த உறுப்பினர் ஜுனைட் நளீமி ஓட்டமாவடி முதலாம் வட்டராத்தில் தான் ஒரு வாசிகசாலை திறக்க உள்ளதாகவும், அதன் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்காக பிரதேச சபையில் உள்ள ஊழியரை அல்லது மேலதிகமாக வெளியிலிருந்து ஒரு ஊழியரை சபையினால் நியமனம் செய்து தரப்பட வேண்டும் என தெரிவித்ததை அடுத்து, உறுப்பினர் அன்வர் ஆசிரியரினால் முன்மொழியப்பட்ட ஆலோசனையான சபையினால் நியமிக்கப்பட்டு மாதாந்த சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியைகள் நேரகாலத்துடன் வீடு செல்வதனால், முன்பள்ளி பாடசாலைகள் முடிவடைந்தவுடன் அவர்களில் ஒருவரை வாசிகசாலையின் பணிகளுக்காக அமர்த்த முடியும் என்ற கருத்தானது ஏகமானதாக சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் போது சூடான விவாதங்கள் ஏற்பட்ட வேலையில் குறுக்கிட்ட எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் LT.புர்கான் கல்குடா பிரதேசத்தில் யாராக இருந்தாலும் சரி முதலில் முஹைதீன் அப்துல் காதர் கொண்டு வந்த மைதானமான அமீர் அலி விளையாட்டு மைதானத்துக்கு முஹைதீன் அப்துல் காதரின் பெயரை வைத்து விட்டுத்தான் ஏனைய வற்றுக்கு அவருடைய பெயரை வைப்பது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் எனவும், அதற்காக இந்த சபையில் உள்ள உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் எனவும் சபை உறுப்பினர்களை வேண்டிக் கொண்டார்.
இதன் தனது கருத்தினை தெரிவித்த உறுப்பினர் SI.முஹாஜிரீன் ஆசிரியர் மூன்று வருடத்துக்கு முன்பாகவே ஓட்டமாவடி பாடசாலை வீதிக்கு உறுப்பினர் IT.அஸ்மியின் தலைமையில் முஹைதீன் அப்துல் காதருடைய ஞாபகர்த்தமாக வீதிப்பலகை அடிக்கப்பட்டும் உள்ளூர் அரசியல் வாதியின் தலையீட்டினால் அன்னாருடைய பெயரில் குறிப்பிட்ட வீதியானது இன்னும் திறக்கப்படவில்லை எனக் கூறிய போது குறுக்கிட்ட உறுப்பினர் IT.அஸ்மி வீதிக்கு பெயரிடும் விடயத்தில் எந்த உள்ளூர் அரசியல் வாதிகளின் தலையீடுகளும் இருக்க வில்லை என ஆணித்தரமாக கூறியதுடன் , முழு கல்குடாவையும் ஒன்றினைத்தவாறு ஓட்டமாவடி பிரதேசத்தை மையமாக வைத்தே எனது தூர நோக்கு சிந்தனையான பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேக வாசிகசாலையானது வருகின்ற டிசம்பர் மாதம் திறக்கப்படவுள்ளதாகவும், அன்றைய தினம் ஓட்டமாவடி பாடசாலை வீதிக்கான பெயரும் முஹைதீன் அப்துக் காதர் மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்ததோடு, பிரதேச ஊழியர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக சபையின் நிதி ஒதுக்கீட்டிலாவது சபையின் குப்பை அகற்றும் இயந்திரங்களுக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என சபையில் ஆக்ரோசமாக தெரிவித்தார்.
**குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு…….
தங்களது பதவிக்காலப்பகுதியில் எமது பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குறைபாடுகளையும் நம்பிக்கையீனத்தினையும் கடந்த காலங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளோம். பலதடவைகள் குறித்த விடயங்களை நிவர்த்திப்பதாக கூறிய போதும் நீங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம்தாழ்த்துவது கௌரவ பிரதிநிதிகளான எமக்கும் பிரதேச மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே பினவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாங்கள் எதிவரும் இரண்டு வாரங்களுக்குள் சரியான பதில் அலிக்க தவறும் பட்சத்தில் தங்கள் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை மேற்கொள்வதை தவிர்க்க முடியாதுள்ளதென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
01. சபைக்குச்சொந்தமான சுமார் இரண்டு கோடி பெறுமதி வாய்ந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் காணமல் போனமை தொடர்பான உறிய நடவடிக்கை மேற்கொள்ளாமை. சபையின் 33வது கூட்டத்தொடரின் தீர்மானத்தின் அடிப்படையில் 3நாட்களுக்குள் அதனை கையகப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
02. தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பாகங்கள் சபைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவை காணாமல் போயுள்ளது.
03. எமது பிரதேச சபைக்குச்சொந்தமான 36 நீர்த்தாங்கிகள் காணமல் போயுள்ளது. இவற்றின் விபரங்கள் உடனடியாக சபையின் பார்வைக்கு கொண்டுவரல்.
04. எமது பகுதியில் பொருத்தப்படுவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட வீதி மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்பட்டதாக தெரியவில்லை. சபையின் 12வது மற்றும் 25வது அமர்வுகளின் போது காபனேட் இடம்பெறாத மின் விளக்குகள் பொருத்துவதாக தீர்மானிக்கப்பட்டும் தரம் குறைந்த மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை.
05. காகித ஆலை எமது சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைப்பணத்தினை உடனடியாக பெற சட்ட நடவடிக்கை எடுப்பதென சபையின் 25வது அமர்வில் தீர்மானிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை.
06. சபை நடவடிக்கையினை பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு பார்வையிடுவதற்கான பார்வையாளர் கூடம் அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டும் இதுவரை செயற்படுத்தாமை.
07. 39 எனேஜிசர் மின் விளக்குகள் நிருவனங்களினூடாக கொண்டுவரப்பட்டு தங்களது பிரதேச வட்டாரத்திற்கு மாத்திரம் பொருத்தியமை.
08. ஜெயிக்கா திட்டத்தின் மூலம் ஓட்டமாவடி பிரதேச எல்லைக்குள் அமைக்கப்படவிருந்த வீதிகளை தங்களது பிரதேசத்திற்கு மாத்திரமென பிழையாக அடையாளம் காட்டி கொண்டு சென்றமை.
09. கடந்த உள்ளூராட்சி, வாசிப்பு மாதங்களின் போது ஒதுக்கப்பட்ட நிதிகளை ஒரு குழு மூலம் ஆலோசனைப்படி செலவு செய்தல் என்ற தீர்மானத்தையும் மீறி குறித்த தனது பிரதேச பாடசாலைக்கு மாத்திரம் பயன்படுத்தியமை.
10. சபையின் 26வது தீர்மானத்தின் அடிப்படையில் பிரதேச சபையின் சட்டமூல உபவிதிகள் அமைக்கப்படவேண்டும் என தீர்மாங்கள் எடுக்கப்பட்ட போதும் இதுவரை மேற்கொள்ளப்படாமை.
11. சபையின் 26வது அமர்வின் தீர்மானப்படி எமது சபையின் எல்லைக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களின் இருப்பினை உறுதி செய்வதற்காக சனசமூக நிலையங்களை அமைத்தல் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றாமை.
12. சபையின் எல்லைக்குற்பட்ட வாகனேரி, பொத்தானை, கள்ளிச்சை பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமது பிரதேச எல்லைப்பிரச்சினைகளுடன் தொடர்பானவை. எனவே இப்பிரதேச வேலைத்திட்டங்கள் எமக்கு அறிவிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டும் தன்னிச்சையாக எல்லாவற்றையும் சபையின் வெளிப்ப்டைத்தன்மைக்கு மாற்றமாக கௌரவ உறுப்பினர்களுக்கு தெரியாமல் மேற்கொள்ளல்.
13. சபையின் அனுமதி இன்றி சபையின் சொத்துக்களையும் அதிகாரிகளையும் பிழையாக பயன்படுத்தியமை. உறுப்பினர்களின் அனுமதி இன்றியே அவர்களது பெயரினை அச்சிட்டு நிகழ்வுகளை நடத்தியமை.
14. உண்மைக்குப்புறம்பாக கௌரவ உறுப்பினர்கள் மீது பிழையான கருத்துக்களை அண்மைக்காலமாக மேடைகளில் பேசித்திரிந்தது.
இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதும் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment