கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விஞ்ஞான, கணிதப்பிாிவு மாணவா்களின் கல்வி முன்னேற்றம் தொடா்பான கலந்துரையாடல் 2014.11.14ஆந்திகதி வெள்ளிக்கிழமை மீராவோடையில் அமைந்துள்ள KCDAயின் காாியாலயத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் KCDAயின் ஆலோசகா் ஜனாப். எம்.ஐ. லெப்பைத்தம்பி அவா்களை மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், KCDAயின் தலைவரும் மற்றும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஜனாப். ஏ.எம். அன்வா் ஆசிாியா் அவா்கள் சந்தித்து விஞ்ஞான, கணிதப்பிாிவு மாணவா்களின் கல்வி முன்னேற்றம் தொடா்பாக விளக்கமளித்தாா்.
மேலும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விஞ்ஞான, கணிதப்பிாிவு மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக கட்டாாிலுள்ள ஏ.எல். நிலாம், ஏ. றிபாஸ், எஸ்.ஐ.எம். பிலால் ஆகியோாின் முயற்சியினால் சமூக சிந்தனையோடு கட்டாா் வாழ் எம் சகோதரா்களால் நிதி சேகாித்து வழங்கப்படுகின்றதனையும் ஞாபகமூட்டினாா். இதனை மேலும் விாிவுபடுத்தி இப்பாடசாலையில் கற்று தற்பொழுது வெளிநாடுகளில் தொழில் புாிந்து வரும் எமது சகோதரா்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இச்சந்திப்பில் KCDAயின் நிருவாக சபை உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
.jpg)
0 comments :
Post a Comment