சுலைமான் றாபி-
கடந்த 07.11.2014ம் திகதி எமது இம்போட்மிரர் செய்திச் சேவையில் சுட்டிக் காட்டப்பட்ட "நிந்தவூரின் பிரதான வீதியோரங்களில் காணப்படும் மரக்குற்றிகள் அகற்றப்படுமா" எனும் தலைப்பில் வெளியான செய்திக்கு இலங்கை மின்சார சபையின் துரித முயற்சியின் கீழும், நிந்தவூர் பிரதேச செயலாளரின் பணிப்புரையின் கீழும் பொது மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு பெரும் இடைஞ்சலாக காணப்பட்ட மரக்குற்றிகள் அகற்றப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.
மேலும் இந்த மரக்குற்றி அகற்றப்பட்டதனால் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நடைமுறைச் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எனவே இந்த மரக்குற்றிகளை அகற்றும் விடயத்தில் கரிசனை எடுத்து பொது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை நீக்கிய அதிகாரிகளுக்கு எமது செய்திச் சேவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
எனவே இந்த மரக்குற்றிகளை அகற்றும் விடயத்தில் கரிசனை எடுத்து பொது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை நீக்கிய அதிகாரிகளுக்கு எமது செய்திச் சேவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment