நிந்தவூரின் பிரதான வீதியோரங்களில் காணப்படும் மரக்குற்றிகள் அகற்றப்படுமா?



சுலைமான் றாபி-

ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகும் நிலையில் காணப்படும் அதேவேளை, இந்நிர்மாணப்பணிகளுக்காக கிழக்குப் பக்கம் தனியாருக்குச் சொந்தமான அதிசக்தி வாய்ந்த மின்சாரக்கம்பிகள் இணைப்பு செய்யப்படுவதற்காக கடந்த 04.10.2014ம் திகதிய காலப்பகுதியில் அதற்கு தடையாய் உள்ள சகல மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. 
அவற்றில் வெட்டப்பட்ட பனைமரங்களின் சில முக்கிய பாகங்கள் பாவனைக்காக எடுக்கப்பட்டு மீதி கழிவுக்குற்றிகள் அரச அலுவலகங்களான நிந்தவூர் பிரதேச செயலகம், சமூகசேவை திணைக்களம் மற்றும் சமுர்த்தி அலுவலகம் போன்ற இடங்களுக்கு முன்னாலும், அருகிலும் காணப்படுவதனால் இவைகள் பொது மக்களுக்கும், பிரயாணிகளுக்கும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன.

மேலும் அன்றாடம் தங்கள் அலுவலக கடமைக்கு சமூகம் தரும் உத்தியோகஸ்தர்களும், அலுவலக தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு சமூகமளிக்கும் பொது மக்களும், வாகன சாரதிகளும் முறையான இடத்தில் தங்கள் வாகனங்களை தரிப்பிடம் செய்யாமலும், இரவு நேரங்களில் துவிச்சக்கர வண்டிகள் மூலம் பயணம் செய்பவர்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இப்பாதையோரத்தில் அதிக சன நடமாட்டம் காணப்படுவதால் முறையாக தரிப்பிடம் செய்யப்படாத வாகனங்களின் வாகனச்சாரதிகளும் தண்டிக்கப்படுகின்றனர்.

எனவே, அன்றாடம் பொதுமக்களால் அதிகம் பிரயோசனப்படுத்தப்படும் அலுவலகங்களுக்கு முன்னாலும், அருகிலும் காணப்படும் பனை மரக்குற்றிகளை அகற்றி போக்குவரத்து அவஸ்தைகளையும், அதன் மூலமாக ஏற்படும் இன்னல்களையும் நிபர்த்தி செய்து கொடுப்பது அதிகாரிகளின் கடமையல்லவா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :