இக்பால் அலி-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் சமனாக மதித்து நடப்பவர். எல்லாயின மக்களிடையேயும் சமய அடிப்படைவாதிகள் உள்ளனர்.
எமது ஜனாபதிபதி அவர்கள் மிக மோசமானவர்கள் என்று உங்கள் மத்தியில் பொய் பிரச்சாரங்களை சில கட்சிக்காரர்கள் மேற்கொள்வார்கள். அவர்களுடைய விசமத்தனமான கருத்துக்களை நம்பட வேண்டாம்.
இம்முறையும் எமது ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதி. ஜனாதிபதிதான் உங்கள் பகுதிக்கு ஏராளனமான அபிவிருத்திகளைச் செய்துள்ளார். அவர் மேலும் செய்யுமாறு எங்களுக்கு நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். எப்போது நான் முஸ்லிம்களுடைய பக்கம் இருப்பேன்.
நான் எந்த அடிப்படைவாதிகளுக்கும் பயமில்லை. நான் இருக்கும் வரை முஸ்லிம்களுடைய பாதுகாவலானாக இருப்பேன் என்று வடமேல் மாகாண முதல்லமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பிறந்த நாளையும் பதவிப் பிரமாணத்தையும் முன்னிட்டு கிரிஉல்ல கல்வி வலயத்தில் குளியாப்பிட்டிய குருவிக்கொட்டுவ சுலைமான் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கணனி ஆய்வு கூட திறப்பு விழா 18-11-2014 நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ, எல். எம். சாதீக் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா வைபத்தில் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தங்களுடைய சொந்த அரசியல் இலாபங்களுக்காக கரையோர மாட்டம் கேட்கின்றனர். இதனை யாரும் அனுமதிக்கப் போவதில்லை. இங்குள்ள முஸ்லிம்கள் எல்லாயின மக்களுடன் சேர்ந்து வாழும் நல்ல பக்குவம் கொண்டவர்கள். இந்தப் பகுதியில் நான்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபை
உறுப்பினர்கள் இருந்தனர். கடந்த மாகாண சபைத் தேர்தலில் என்னுடைய வெற்றிக்காக இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை ஆதரித்தனர். இப்போது ஒரு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் கூட இல்லை.
வடமேல் மாகாணத்தில் கல்வி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓலைக் குடிசைகளாக எட்டுப் பாடசாலைகள் காணப்பட்டன. அவை யாவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கட்டடங்களுடன் விளங்குகின்றன. அதில் இரு முஸ்லிம் பாடசாலைகளும் அடங்கும்.
குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளுடைய குறைநிறைகளை கவனத்திற் கொண்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிலவுகின்றன. வடமேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்கு குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 3000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினுடைய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளேன். இந்த நியமனம் விரைவில் நடைபெறும். அதுபோல கூடுதலாக முஸ்லிம் பாடசாலைகளில் கணித விஞ்ஞான ஆசிரியர்கள் நிலவுகின்றன.
விரைவில் உதவி ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் மூலம் இங்கு நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடயங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சமன் பிரிய, கிரிஉல்ல கல்வி வலயப் பணிப்பாளர் ஜெயந்தி மாலா, கொழும்பு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் முஜிப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


.jpg)
0 comments :
Post a Comment