கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவன ஏற்பாட்டில் இடம்பெற்ற அதிபர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு!

KCDA ஊடகப்பிரிவு-

ல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கோறளைப்பற்றுமேற்கு கல்விக்கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு 2014.11.18ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 04.15மணியளவில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் KCDAயின் உபதலைவர் ஜனாப். ஏ.எம்.எம். முா்சிதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் புதியஅதிபராக கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாப். ஏ.எல். அபுல் ஹசன் அவர்களும், பாடசாலையின்பிரதி அதிபா் ஜனாப். ஏ.எம். அன்வர் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இக்கெளரவிப்பு நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ. கே.பீ.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிபபாளர் ஜனாபா. கே.எல்.எம். ஜெமிலுந்நிஸா,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.எச்.எம்.எம். றுவைத், மட்/மம/பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். எல்.ரீ.எம்.சாதிக்கீன், பாடசாலைஅபிவிருத்திச்சபை உறுப்பினர்கள், மீராவோடை மீராஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும்KCDAயின் நிருவாக சபை, ஆலோசனை சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில், உரையாற்றிய மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரும், KCDAயின் தலைவருமான ஜனாப். ஏ.எம். அன்வர் அவர்கள், இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணித,விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் மற்றும் இம்மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவெளிநாடுகளில் தொழில் புரியும் இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான ஜனாப். ஏ. றிபாஸ், எஸ்.ஐ.எம்.பிலால், எஸ்.எம்.எம். பயாஸ், ஏ.எல். நிலாம், என். அல் அஸ்ஹா், எஸ்.எச்.எம். பா்ஹான், எம்.ஏ. பாயிஸ், ஆா்.வஹாப்தீன், எஸ். அப்துல்லாஹ், எஸ். றியாஸ் ஆகியோர் வழங்கி வரும் நிதியுதவி பற்றித்தெரிவித்ததுடன்,தனது நன்றியினையும் சபையில் தெரிவித்துக்கொணடார்.

அத்துடன் மட்/மம/மீராவோடை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபரான ஜனாப். ஏ.எல்.அபுல் ஹசன் அவர்கள் தனதுரையில், நான் புதிதாக இப்பாடசாலையினைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், எனக்குஇப்பிரதேசத்திலுள்ள ஊர்ப்பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச்சபை, பழைய மாணவா் சங்கம்,மீராவோடை மீராஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகிகள் ஆகியோர் வழங்கி வரும் ஒத்துழைப்பிணைக்கண்டு மிகவும்சந்தோசப்படுவதுடன், எதிர்காலத்தில் இப்பாடசாலையினை சகலரது ஒத்துழைப்புடனும் முன்னேற்றப் பாதைக்குஇட்டுச்செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து உரையாற்றிய கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல்பணிப்பாளரும், KCDAயின் ஆலோசகர்களில் ஒருவருமான ஜனாப். எச்.எம்.எம். றுவைத் தனதுரையில்,இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணித, விஞ்ஞானப்பிரிவு மற்றும் இப்பாடசாலைக்கும் தேவையானஎல்லா வளங்களையும் 2015ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் ஒதுக்கீடுகள் கிடைக்கின்றபோது, என்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் பெற்றுத்தருவேன் எனவும், மிகவும் சிரமத்தின் மத்தியில்இப்பாடசாலையில் ஆரம்பிக்கபட்டுள்ள கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில்கூடுதல் கரிசனை காட்டி, நல்ல பெறுபேற்றினை எதிர்காலத்தில் இப்பாடசாலை பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் தனது உரையில் தெரிவித்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில் இப்பாடசாலையின் புதிய அதிபராக தனது கடமையினைப்பொறுப்பேற்றுக்கொண்ட மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் அவா்களுக்கு KCDAயின் ஆலோககர்களில் ஒருவரும், அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின்செயலாளருமான ஜனாப். ஐ.எம். றிஸ்வின் அவர்களாலும், கடந்த ஒரு வருடகாலமாக பல சிரமங்களுக்குமத்தியில் இப்பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியமைக்காக பிரதி அதிபர் ஜனாப். ஏ.எம்.அன்வர் அவர்களுக்கு KCDAயின் ஆலோககர்களில் ஒருவரான ஜனாப். எம்.ஐ. லெப்பைத்தம்பி அவர்களாலும்நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :