அமைச்சர் உதுமாலெப்பை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரிக்கு உதவிகள்!

சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம்  மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் நிதி  ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரிக்கு போட்டோ பிரதி இயந்திரம்  வழங்கும் நிகழ்வு கல்லூரியில் இடம் பெற்றது.

கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.காசீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு  மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அமைச்சருடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அம்பாரை மாவட்ட பிரதி திட்டம் பணிப்பாளர்  ஐ.எல்.தௌபீக், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் யு.எல்.நிஸார்,  முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.இப்றாலெப்வை, உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எம்.நியாஸ்(மௌலவி),  அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர், ஏ.எல்.அஷ்ரப் மௌலவி உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களின் தேவையை அறிந்து பணியாற்றி வரும் அமைச்சர் அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் இவ்வேலை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அபிவிருத்திக்கும் பல உதவிகளை செய்து வருகின்றார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள அரபுக் கல்லூரிக்கான கட்டடங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் மேன் பாலம் ஒன்றினை அமைப்பதற்கும், புதியதாக மூன்று மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்ளினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது என்பது விஷேட அம்சமாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :