திகாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (05) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியூ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்;, கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்கிரம ஆராச்சி, கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ரீ.மோகனகுமார், உள்ளிட்ட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாகாண மட்ட தமிழத் தின மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கி கௌரவித்தார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment