ஜனாதிபதித் தேர்தலில் பொதுபல சேனாவும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே தெரிவித்தார்.
பொது பலசேனா நிறுத்த இருப்பது பொது வேட்பாளர் அல்ல என்றும் அவர் தேசிய தலைவர் என்றும் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது இந்நேரத்தில் பொறுத்தமானது என தேரர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் யோசனைகள் நியாயமானதென்றும் அரசாங்கம் கட்சிகளை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment