உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிப்பிரயாயத்தின் பிரதியை வழங்குமாறு ஐ.தே.கட்சி கோரிக்கை!

னாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சட்டத்தில் தடையில்லை என்று உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிப்பிரயாயத்தின் பிரதியை தங்களுக்கு வழங்குமாறு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்கவே, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

உயர்நீதிமன்றத்தின் அபிப்பிரயாயம் தொடர்பில் தங்களுடைய கட்சியும் இந்நாட்டு மக்களும் சரியான தெளிவை பெறவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் அபிப்பிரயாயம் அல்லது தீர்ப்பு எவ்வாறானதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனை சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நாடாளுமன்றத்தில் கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்அஸ்வர், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். 

அந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையான ஹன்சாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :