இச் சந்திப்பில் அங்கத்துவ அமைப்புகளின் செயற்திட்டங்கள், எதிர்கால இலக்குகள் முன்னுரிமைகள் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்ககள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தேசிய ஷூறா சபையும் அங்கத்துவ அமைப்புகளும் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் போன்றவை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்த முக்கிய சந்திப்பின் போது ஒவ்வொரு அங்கத்துவ அமைப்பும் தமது கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய முன்னெடுப்புகள் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக விளக்கங்களை முன்வைத்தன. மேலும் அங்கத்துவ அமைப்புக்கள் வேலைகளை ஒழுங்குபடுத்தி, பகிர்ந்தளித்தல், சமூக, தேச, சகவாழ்வுக்காக தமது வேலைகளை எவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுத்தல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் ஒவ்வொரு அமைப்பினதும் தலைவர், செயலாளர், உட்பட உயர் மட்ட மற்றும் ஆலோசனை சபை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முஸ்லிம் அமைப்புக்கள் தமது வேலை திட்டங்கள் தொடர்பில் இவ்வாறானதொரு கலந்துரையாடலில் கலந்து கொண்டமை இதுவே முதல் தடவையாகும்.
.jpg)
0 comments :
Post a Comment