கல்முனை மாநகர சபை முதல்வரை காணவில்லை: உறுப்பினர்கள் மருதமுனையில் கூட்டம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களில் பலர் தற்போது தங்களது பாதுகாப்பு, உயிர் உத்தரவாதம் தொடர்பில் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். சில தினங்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற அடாவடியினால் அச்சமுற்றுள்ள பலர் அவசரமாக மருமுனையில் கூடி தங்களது எதிர்காலம் குறித்து ஆராய்ந்துள்ளனர். என எனக்கு நம்பமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மிகவும் இரகசியமாக கூடியே இவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சம்பவம் இடம்பெற்ற போதும் அதற்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்துள்ளதுடன் தங்களது பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளமை குறித்த தங்களது அச்ச உணர்வுகளை வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற மறுநாளே கல்முனையின் குட்டித் தலைமை அவசர, அவசரமாக கொழும்புக்கு வந்து விட்டாராம். இடம்பெற்ற அடாவடித்தனங்கள் தொடர்பில் எந்தவித சட்ட, ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏனையோரது பாதுகாப்பை உறுதிப்படுத்தாத நிலையில் அனைவரையும் அனைத்தையும கைவிட்டு விட்டே அவர் கொழும்புக்கு கிளம்பியமை இவர்களிடையே அதிருப்தியையும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளன.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து முறையிடுவதற்கும் கல்முனை குட்டி தலைமையின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிக்காட்டவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சந்திப்பு வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :