அஹமட் இர்ஸாட்-
மட்டக்களப்பு, புனானை ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் முகமாக இடம்பெற்ற பரிசளிப்பு விழாவானது தலை நகர்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒப்பானதாக காட்ச்சியளித்தமையினை அதீதிகளின் உரைகள் வெளிச்சம் போட்டுக்காட்டின.
பாடசாலையின் முதல்வர் MUM.நசீர் தலைமையில் நேற்று 14.11.2014 வெள்ளிக் கிழமை பாடசாலையின் முற்றத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் முன்னால் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான சட்டத்தரனி அல்-ஹாஜ் MSS.அமீர் அலி பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததுடன், கெளரவ அதீதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி, கோட்டக்கல்வி அதிகாரி AL.மீராசாஹிப், ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி M.சுபைர், அக்கீல் டயர் உரிமையாளர் அல்-ஹாஜ் MAC.நியாஸ் ஆகியோருடன், முன்னால் அதிபர் AL.அபுல்ஹசன், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்குடா பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இவ்விழாவில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இடம்பெற்ற மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளானது பலராலும் பாராட்டப்படக் கூடிய விடயமாக காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதன் போது அதீதிகளால் சித்தியடைந்த மாணவ,மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பெருமதிமிக்க பரிசில்கள், பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார்கள்.
.jpg)




.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment