.jpg)
பழுலுல்லாஹ் பர்ஹான்-
பழைய மட்டக்களப்பு –கல்முனை வீதியின் வீதி விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டமாக 03-11-2014 நேற்று திங்கட்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளினால் அளவையிடும் பணிகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக வீதியின் மத்தியிலிருந்து வீதி அபிவிருத்திக்கு தேவையான பகுதியை அடையாளமிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பழைய மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி ஊர் வீதியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ,தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த வீதி இரண்டு வழி போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதோடு மேலதிகமாக சைக்கிள் மற்றும் செல்லக்கூடிய வகையில் ஒரு வழியும்,வடிகாணும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment