ஆசிய பசுபிக் நாடுகளின் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு!அமைச்சர் விமல் பங்கேற்பு

 அஷ்ரப் ஏ சமத்-

5வது ஆசிய பசுபிக் நாடுகளின் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர்கள் மட்டத்திலான ஒர்  மாநாடு தற்பொழுது தென் கொரியாவில் நடைபெற்றுவருகின்றது. இலங்கையின் சார்பில்  வீடமைப்பு நிர்மாண பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்வன்ச தலைமையிலான ஒரு குழு  பங்கேற்பு.

இம் மாநாடு இம் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதிவரை தென்கொரியாவின்  தலைநகரில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் நாடுகளின் வீடமைப்பு  நகர அபிவிருத்தி சம்பந்தமான அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் தத்தமது  நாடுகளில் வீடமைப்பு நகர அபிவிருத்தி பற்றிய ஆலோசனைகளையும் முன்னேற்றத்தையும்  சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்படும். அத்துடன் வீடுகளையும் நகர  அபிவிருத்திகளுக்கும் நிர்மாணம், நிதி, தனியார் கம்பணிகள் முதலீடு, மனித  குடியிருப்பு, இயற்கை அனர்த்தம் போன்ற திட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாகாவும்  அங்கிருந்து அமைச்சர் தொலைபேசி முலம் தெரிவித்தார். இம்மாநாடு ஏற்கனவே ஈரான்,  இந்தியா, இந்தோனோசியா, ஆகிய நாடுகளில் 2006ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு  தலைப்புக்களில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை உறுப்புரிமை நாடுகளில் நடைபெற்று வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தென்கொரிய  வீடமைப்பு நகர அபிவிருத்தி காணி போக்குவரத்து அமைச்சர் சு சேங் ஹகேவையும்  சந்தித்தார். அந்த நாட்டில் 28 ஆயிரம் இலங்கையர்கள் தொழில்வாய்ப்பை பெற்று  சேவையாற்றுகின்றனர். அவர்களுக்கென ஒரு வீடமைப்புத்திட்டத்தினை இலங்கையில் அமைச்சு  மட்டத்தில் செயல்படுத்த வருமாறு விமல் அந்த நாட்டின் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். 

தென்கொரியாவில் தொழில் செய்பவர்கள் தமது சம்பளத்தில் ஒரு தொகையை மாதாந்தம்  செலுத்தி இலங்கையில் வீடொன்றை நிர்மாணித்துக்கொள்ள ஒரு திட்டத்தினை செயல்படுத்த முடியும்  என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இவர்கள் தமது தொழிலை முடித்து இலங்கை வரும்போது அவர்களுக்கென ஒரு வீடமைப்புத்திட்டத்தினை  அமைக்கும் திட்டத்திற்கு தென் கொரியா முதலிட வருமாறு அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை  நடாத்தப்பட்டன. இதற்கான ஒரு திட்டத்தினை கொழும்பு மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :