பொது எதிரணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெறும். வண. சோபித தேரர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்பட கையெழுத்திடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,இந்நிகழ்வை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற நிலைமையில்,தற்போது விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துள்ள கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்து இடுவார்கள்.
இந்நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நடைபெறும் எதிரணியின் இந்த நிகழ்வை தடுத்திட பல்வேறு சக்திகள் இடையூறு செய்து வருகின்றன. இந்த இடையூறுகள் எங்களை நிறுத்திவிட முடியாது என்பதுடன் அவசியமானால் நடு வீதியில் அமர்ந்தும் இந்நிகழ்வை நடத்திட, பொது எதிரணி தயாராக இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment