அஷ்ரப் ஏ சமத்-
மொரட்டுவை அங்குலானையில் இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு சபையிணால் நிர்மாணித்த 270 தொடர்மாடி வீடுகள் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்ப்பட்டு அப்பிரதேச வாழ் மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
மொரட்டுவை ரத்மலானை கடலோரப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கே இவ் வீடுகள் கையளிக்கப்பட்டன. 9 மாடிகளைக் கொண்ட இவ் வீடுகள் லிப்ட்டில் மேல்மாடிக்குச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் வீட்டுத்திட்டத்தினை அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசனையின் பேரில் கடந்த வருடம் அடிக்கல் நாட்டி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டத்தினை வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பொறியியல் தாபணம் நிர்மாணித்துள்ளது.
இந் நிகழ்வில் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, வீடமைப்பு பிரதியமைச்சர் லசந்த அழகியவண்னவும் கலந்து கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment