அமைச்சர் விமல் 1200 புதிய வேலைகளை வழங்கினார்:ஆனால் SLMC 100 சமாதான நீதவான் வழங்கியுள்ளது!

அஸ்ரப் ஏ சமத்-

மைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி ஆதரவாளர்கள் 1300 பேர் அவரது அமைச்சின் கீழ் நிறுவணங்களில் தற்காலிக  அடிப்படை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கியிருந்தார். 

ஜனாதிபதி கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் 180 நாள்  தற்காலிகமாக சேவைசெய்திருந்தால் அவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன் நிரந்தரமாக்கப்படுவர் என  அறிவித்திருந்தார். 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 600 பேர், இலங்கை பொறியியல் நிறுவனத்தில் 300 இக்டாட் 100  பொறியற் நிறுவனம் 100 அத்துடன் 30 இணைப்புச் செயலாளர்கள், உப தலைவர்கள், தலைவர்கள் செயற்பாட்டுப்  பணிப்பாளர்கள், பிரதி பொதுமுகாமையாளர்கள் என கட்சி அடிப்படையில் நியமணம் வழங்கபட்டுள்ளது. இதில் எந்தவொரு  முஸ்லீம் தமிழர்கள் இல்லை.

இவர்கள் அனைவரும் இன்று நிரந்தர நியமணம் பெறுகின்றனர். இதே போன்று ஏனைய அமைச்சர்களின்  ஆதரவாளர்களுக்கும் நிரந்தர நியமணம் வழங்கப்படுகின்றது.

கட்சி ஆதரவாளர்கள் 1240 தணித்தனி வீடுகளும், கொழும்பில் தொடர்மாடி வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்புக்;  கடன் 5 இலட்சம,; இலவசக் கடன் 2 இலட்சம் 2750 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1 இலட்சம் வாக்காளர்கள் விமல் வீரவன்சவின் பின்னாள் உள்ளது. இதே அமைச்சிற்குப் பொறுப்பாக 6 வருடம் முன்னாள் அமைச்சர் பேரியல அஸ்ரப் பொறுப்பாக இருந்தார் அவரினால்  அம்பாறை கல்முனையில் 20 முஸ்லீம்களுக்கு மட்டும் தேசிய வீடமைப்பு தொழில் வழங்கினார் அதுவும் நாளந்த சம்பள  அடிப்படையில் அவர் தோற்றதும் அவர்களை விலக்கிவிட்டனர். 

அவர் ஆகக்ககுறைந்தது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்  ;இளைஞர்கள் யுவதிகள் 300 பேருக்காவது இவ்வாறு தொழில் கொடுத்திருந்தால் அவர் அம்பாறையில் கடந்த பாராளுமன்றத்  தேர்தலின்போது 1700 விருப்பு வாக்களினால் தோற்று இருக்க மாட்டார்.

ஆனால் அரசில் முஸ்லீம் காங்கிரசின் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  பசீர்சேகுதாவுத் அங்கம் வகிக்கின்றனர். ஏனைய 6 பாராளுமன்ற  உறுப்பிணர்களும் அரசில் உள்ளனர். 

அவர்களது ஆதரவாளர்கள் எத்தனைபேர்  இந்த சுற்றறிக்கையின் கீழ் முஸ்லீம் இளைஞர்களுக்கு இந்த அரசியல்  தொழில் பெற்றுக் கொடுத்துள்ளனரா? 

ஆகக்க குறைந்தது ஒரு பியோன்  தொழிலாயாவது இவர்களினால் வழங்கமுடியவில்லை. கிழக்கு மாகாணசபையிலும்  ஆளுணரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் சிலர் முஸ்லீம்கள் ஜே.பி.  சமாதான நீதவான் பதவிகளைப் பெற்றுள்ளதைக் குறிப்பிடத்தான் வேண்டும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :