அரசியல் யாப்புடன் விளையாடுவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம்- அநுரகுமார திஸாநாயக்க

தேர்­தலை தடுக்க நாம் முயற்­சிக்­கின்­றோமே தவிர அர­சாங்­கத்தை கவிழ்க்க தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாம் தயா­ரில்லை. அர­சியல் அமைப்­பி­னையும், சட்­டத்­தையும் பாது­காக்க வேண்டும். அர­சியல் யாப்­புடன் விளை­யாட எவ­ருக்கும் இட­ம­ளிக்க மாட்டோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

சந்­தர்ப்பம் பார்த்­தி­ருக்­காது நாட்டில் சட்­டத்­தினை நிலை­நாட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு சகல விதத்­திலும் அரசாங்கம் தயார் என தெரி­வித்­துள்ள நிலையில் ஜே.வி.பி.யின் நிலைப்­பாடு தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சட்­ட­வி­ரோத தேர்­தலை நடத்­தவே அர­சாங்கம் தயா­ராகி வரு­கின்­றது. அர­சுக்குள் இயங்கும் பிரி­வி­னை­வா­தி­க­ளையும், குழப்­பக்­கா­ரர்­க­ளையும் தூண்­டி­விட்டு ஆட்­சி­யினை தொடர்ந்தும் தக்­க­வைத்­துக்­கொள்­ளவே ஜனா­தி­பதி முயற்­சிக்­கின்றார். இதற்கு நிக­ராக நாமும் எதிர்க்­கட்­சி­களும் தேர்தல் களத்தில் குதிப்­பது சட்­ட­வி­ரோத செய­லுக்கு துணை­போகும் வகை­யி­லேயே அமையும். அர­சியல் யாப்பு இந்த நாட்டின் மூலா­தாரம். அதனை மீறி செயற்­ப­டு­வது தேசத்­து­ரோக செயற்­பா­டாக அமையும். அவ்­வா­றான தேசத்­து­ரோக செய­லையே இன்று அர­சாங்கம் செய்ய நினைக்­கின்­றது.

இன்று அர­சாங்­கத்தின் சுய­ந­லத்­திற்­காக செய்யும் தவறு நாளை மிகப்­பெ­ரிய விளை­வினை ஏற்­ப­டுத்­தி­விடும். இதற்கு துணை­போக நாம் தயா­ரில்லை. இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது முறை போட்­டி­யி­டு­வதை தடுக்­கவே நாம் முயற்­சிக்­கின்­றோமே, தவிர அர­சாங்­கத்தை கவிழ்க்கும் கொள்­கையில் சட்­ட­வி­ரோத தேர்­தலில் போட்­டி­யிட நாம் தயா­ரில்லை. அர­சியல் அமைப்­பினை மீறும் செய­லையும் அர­சியல் அமைப்­புடன் எவரும் விளை­யா­டவும் ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டோம்.

அதற்­கா­கவே மக்­களை தெளி­வூட்டும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம். மக்­களின் தெளிவும் அவர்­களின் முடி­வுமே இறு­தி­யா­னது. அதற்­கா­கவே முக்­கிய பிரதிநிதி­களை இணைத்­துக்­கொண்டு போராடி வரு­கின்றோம்.

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்சி சந்­தர்ப்­பத்­திற்­காக காத்­தி­ருக்­கின்­றது. சந்­தர்ப்­பங்­களை அமைத்­துக்­கொள்ள முடியும். அடுத்த சட்ட முறை­யான தேர்­தலில் அதற்­கான பிர­கா­ச­மான வாய்ப்பு அமையும். ஆனால் தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும், அர­சியல் அமைப்­பிற்கு முர­ணான தேர்­தலில் போட்டியிடுவது அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமான வேறுபாட்டினை காட்டாதுபோய்விடும். எனவே அரசாங்கத்தின் நீதிக்கு புறம்பான இத் தேர்தலை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :