எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று. கோட்டே ஸ்ரீ நாக விஹாரைக்கு சென்று, மாதுலுவாவே சோபித்த தேரரை சந்தித்து ஆசிப் பெற்றார்.
இந்த சந்திப்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்த கருத்து:-
“இந்த பயணத்தில் பல்வேறு தடைகள் ஏற்படும். அவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். வைராக்கியம் வைக்க வேண்டாம். யாருக்கும் குரோதம் இழைக்க வேண்டாம். யாருடைய நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்த வேண்டாம். இது தனிப்பட்ட வெற்றி கிடையாது. கொள்கை ரீதியான வெற்றியாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.”
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து:-
“ஜனவரி மாதம் 8ஆம் திகதி, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் பிறந்த தினமாகும். பண்டாரநாயக்கவின் பிறந்த தினத்தில் நடாத்துகின்ற தேர்தலில், 1956ஆம்ஆண்டு பெற்றுக் கொண்ட வெற்றியை போன்று, 70 ஆம் ஆண்டு வரலாற்று வெற்றியின் பின்புலத்துடன் இம்முறை சிறந்த ஒரு யுகத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல சகோதர அரசியல் கட்சிகள் இதனுடன் இணைந்துள்ளன.”
அதன்பின்னர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர். மாதுலுவாவே சோபித்த தேரரை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தினர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மைத்தரிபால சிறிசேன தெரிவித்த கருத்து:-
“நான் அதிகாரத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர், இந்த நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு முழுமையான ஊடக சுதந்திரத்தை வழங்குவேன். சுதந்திரமாக கடமையாற்ற முடியும்.’
.jpg)
0 comments :
Post a Comment