முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனபோல் இனி எவரும் சதிகளில் சிக்கி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கட்சியைக் காட்டிக் கொடுத்துள்ளது மட்டுமல்ல ரணில் விக்ரமசிங்கவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதில் ஒரு பகடைக்காய் மத்திரமே என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுட்டிக்காட்டினார்.
மேலும் இம்முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 25 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்றது அரசியல் சதிகள் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக போராட தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாகவும் இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன கூறினார்.
.jpg)
0 comments :
Post a Comment